சீனாவின் தடுப்பூசி தரமானது அல்ல என்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியனின் அனுமதி கிடைப்பது சந்தேகம்தான் என்றும் இத்தாலி பிரதமர் மாரியோ டிராகி (Mario Draghi) தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த தடுப்பூசியான சினோவாக் தரமானது அல்ல என்று சிலியை சுட்டிக் காட்டி அவர் தெரிவித்தார்.
அந்நாட்டில் சீனத்தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு புதிய உருமாறிய கொரோனாவில் இருந்து பாதுகாக்க கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டிய நிலையை அவர் சுட்டிக்காட்டினார்.