கோவாக்சின் தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு தற்போது வரை அவசரகால பயன்பாட்டுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவேக்சினுக்கு முழு அங்கீகாரம் கோரி, மத்திய சுகாதாரத்துறைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதற்காக இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்துள்ளது.
இந்நிலையில் மேலும் கூடுதல் தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கோரியதால் மூன்றாம் கட்டமாக 25 ஆயிரத்து 800 பேருக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டு அந்த ஆய்வறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்பட உள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனையியில் கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.