போலி கால் சென்ட்டர் மூலம் இங்கிலாந்தில் உள்ள பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இரண்டு கால் சென்ட்டர்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் போல பேசி இணைய பேசி வழியாக அழைத்து மக்களை வரி பாக்கி இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பதை இந்த கும்பல் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
பணம் அந்நாட்டின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதும் பின்னர் அது இவர்களின் கணக்கில் மாற்றப்படுவதும் நடைபெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பவிந்தர் சிங் என்பவர் தமது மூன்று உறவினர்களுடன் இந்த இரண்டு போலி கால் சென்டர்களை நடத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.