கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான பயண கட்டண முன்பதிவில் 10சதவீத சலுகை அளிக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் மெகா தடுப்பூசி திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தடுப்பூசி முதல் டோஸ் போட்டாலோ அல்லது இரண்டு டோஸ் போட்டாலோ அவர்களுக்கு விமான கட்டணத்தில் 10சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.