இந்தியாவில் பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசுடன் விரைவில் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார். இந்தியா உள்பட குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு 100 கோடி பைசர் தடுப்பூசிகள் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்வதை துரிதப்படுத்த வேண்டும் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அண்மையில் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.