மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு 9 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 9 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சிறு துறைமுகங்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் துறைமுக சட்ட மசோதா, மாநில அரசின் பல அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மாநில அரசின் கீழ் இருக்கும் சிறு துறைமுகங்களின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படும் என்பதால், நாளை மறு நாள் மத்திய அரசு நடத்தும் மாநில அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில், இந்த சட்ட வரைவு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.