பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அதிபர் Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு தற்போது வரை 10 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 4 கோடி டோஸ் பைசர் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 11 கோடி பேர் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில் வெறும் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் Rodrigo Duterte நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.