இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்ச அளவாக கடந்த மே மாதம் 6ம் தேதி ஒரே நாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த 88 நாட்களுக்குப் பின்னர் நேற்று மிகக்குறைந்த அளவாக ஒரு நாள் தொற்று 53 ஆயிரத்து 256 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதால் 2வது அலை குறைந்து விட்டதாகக் கருதக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 3 வது அலை பரவி வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் தொற்று நோய் பரவலின் வேகம் 5 விழுக்காடு வரை இருப்பதாகவும், எனவே 2வது அலை நீடிப்பதாகவும் மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.