மாணவர்களுக்கு இரட்டை முகக்கவசம் அணிவித்து சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்தலாமே என உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் நடைபெற்றுள்ளது.
சிபிஎஸ்இ அறிவித்த மதிப்பெண் கணக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாகப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் இருப்பதால் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இரட்டை முகக்கவசம் அணிய வைத்தும், அதிகப்படியான மையங்களை அமைத்தும், கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியும் தேர்வுகளைக் கண்டிப்பாக நடத்தலாம்,' என வாதிட்டார்.