கொரோனா 3 ஆம் அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும் என்ற தகவல் 15 நாட்களுக்கு முன்னரே மத்திய அரசால் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் மாத வாக்கில் 3 ஆம் அலை வீசக்கூடும் என கூறப்பட்டாலும், இந்த மாதம் 3 முதல் 17 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி, தடுப்பூசி போடும் வேகம் அதிகரித்துள்ளதால், 3 ஆம் அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.