காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது.
வடக்குப் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது சில தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பித்து ஓடினர்.
இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற ராணுவத்தினர் குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ளதாகவும், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மோதலின் முடிவில் தீவிரவாதிகள் எத்தனை பேர் இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்பது தெரியவரும் என ராணுவத்தினர் தெரிவித்தனர்.