கொரோனா தடுப்பு மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து சீரம் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்குவது பற்றி அரசு திட்டமிட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், புனேயில் உள்ள சீரம் நிறுவனமும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இத்தகைய பாதுகாப்பு இல்லாததுதான் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குத் தடுப்பு மருந்து வழங்கத் தயங்குவதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தடுப்பு மருந்தின் பக்க விளைவுகளுக்குப் பொறுப்பேற்பதில் இருந்து சீரம் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.