இந்தியாவில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் 113 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இந்தத் தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இது தவிர கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைவரான சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.