இந்தியாவின் உள்நாட்டு கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி கோவாக்சின் விரைவில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அவசர கால சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. ஸ்புட்னிக் வி என்ற ரஷ்ய தயாரிப்பு தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச விமானப் பயணங்கள் போன்றவற்றுக்கு அனுமதி பெற கோவாக்சின் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை நாடியுள்ளது.
கூடுதலான விவரம் கேட்டு தனதுமுடிவை உலக சுகாதார அமைப்பு ஒத்தி வைத்த நிலையில் அந்த விவரங்களை கோவாக்சின் தயாரிக்கும் ஹைதராபாத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்ய உள்ளது. ஆயினும் கோவாக்சின் இரண்டு கட்ட சோதனைகளை நடத்தியுள்ள நிலையில் அதன் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும்போதுதான் அதற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது