கர்நாடகாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பெங்களூருவில் 4 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்களில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து தொழில்களும் 50 சதவீத ஊழியர்களின் பலத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமானத்திற்குத் தேவையான சிமெண்ட், எஃகு விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தொடர்ந்த பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.