லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டார்.
லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில்,அவரின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அவர்கள் அணி திரண்டுள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தேசிய செயல் தலைவராக சுரப்ஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கான பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் ஐந்து எம்.பி.க்களும் பசுபதி குமார் பராஸை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என முடிவெடுத்து சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளனர்.