வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியுலகிற்கு பரவியிருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டை, அந்த ஆய்வத்தில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வந்த பெண் விஞ்ஞானி Dr Shi Zhengli மறுத்துள்ளார்.
பல கொரோனா வைரஸ்களின் பாகங்களை ஒருங்கிணைத்து, புதிய வகை வௌவால் கொரோனா வைரசை உருவாக்கியிருப்பதாகவும், அதில் ஒன்று மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ளது என்றும், 2017ஆம் ஆண்டில் Dr Shi Zhengli ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தார். எனவே, கொரோனா வைரஸை வலிமைப்படுத்தும் ஆய்வுகளை அவர் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்பட்டது.
இதுகுறித்து எதுவும் கூறாமல் இருந்து வந்த Dr Shi Zhengli, தனது மவுனம் கலைத்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வைரசை வலிமைப்படுத்தும் ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை என மறுத்துள்ள அவர், அது எப்படி பரவுகிறது என்பது குறித்தே ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டார்.