கொரோனா பெருந்தொற்றுக்கு செலவழிக்கவும், நலத்திட்டங்களைச் செயல்படுத்த பணத்தை மிச்சப்படுத்தவும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உண்மையில் பொது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பதை ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.
ஆனால் அது மத்திய - மாநில அரசாக இருந்தாலும், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை சேமிப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.