கிரிக்கெட் போட்டியின் போது நடுவரிடம் இருமுறை கோபப்பட்டதற்காக வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் 4 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிபிஎல் எனப்படும் டாக்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்த போது, அபஹானி அணிக்கு எதிராக ஷகிப் பந்து வீசினார். அப்போது முஷ்பிஹூர் ரஹீமை எல் பி டபிள்யூ முறையில் அவுட் செய்ததாகக் கூறி நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் மறுக்கவே, கோபமடைந்த ஷகிப் காலால் ஸ்டெம்புகளை உதைத்தார்.
தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை நிறுத்தும்படி நடுவர்கள் கூறினர். அப்போதும் ஸ்டம்புகளை பிடுங்கி வீசினார். ஷகிப்பின் இந்த செயலைக் கண்ட நடுவர்கள் முறையிட்டதன் பேரில், ஷகிப்புக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.