உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் எம்.கே-3 இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது.
பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய்குமார் இந்த ஹெலிகாப்டர்களை கடலோர காவல் படையில் சேர்த்தார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த உயர்தர இலகு ரக ஹெலிகாப்டர்கள், இந்திய கடலோரக் காவல்படையின் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றார்.
சென்னை, புவனேசுவரம், கொச்சி மற்றும் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை பிரிவுகளில் 16 எம்கே-3 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நவீன ஹெலிகாப்டர்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.