மும்பையில் நடிகர் ஷாருக்கானை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார் பிரசாந்த் கிஷோர். அவருடன் ஷாருக்கான் தமது இல்லத்தில் விருந்துஉபசாரம் செய்ததுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அனுமானங்களை எழுப்பியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சீரிசாகப் படமாக்கி அதில் ஷாருக்கான் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இருவரும் நண்பர்கள் என்றும் இது நட்பு ரீதியான சந்திப்புதான் என்றும் ஷாருக்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.