இந்திய, வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர் இந்தியாவிலிருந்து ஆயிரத்து 300 சிம் கார்டுகளை வாங்கி கடத்தியது தெரியவந்துள்ளது.
இந்திய, வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள சுல்தான்பூர் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்த சீனநாட்டைச் சேர்ந்த ஹான் ஜூன்வே என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் ஆயிரத்து 300 சிம் கார்டுகளை வாங்கி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்த சிம் கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி, இந்திய கணக்குகளை ஹேக் செய்வதற்கும் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹான் ஜூன்வே மீது புளூ கார்னர் நோட்டீஸ் விட பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர்.