கியூபா நாட்டு வங்கிகளில் அமெரிக்க டாலரை கொண்டு பரிவர்த்தனைகள் செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.
வரும் 21-ஆம் தேதி முதல் தடை அனைத்து வங்கிகளிலும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியூபா நாட்டின் மீது அமெரிக்கா வர்த்தகம், போக்குவரத்து, பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை தொடர்ந்து விதித்து வருகிறது.
இந்த நிலையில் வங்கிகளில் அமெரிக்க டாலரை டெபாசிட் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.
வரும் 21-ஆம் தேதி வரை மக்கள் தங்கள் டாலர் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மற்ற நாட்டு பணத்தை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.