விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாகவும், மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் என்றும் ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
அலோபதி மருந்துகளின் செயல்திறன் குறித்துக் கடுமையாக விமர்சித்து வந்த ராம்தேவ், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்றுள்ளார்.
இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு எனத் தெரிவித்துள்ளதுடன் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு அலோபதி மருத்துவம் சிறந்தது என்றும், நல்ல மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் என்றும் பாராட்டினார்.