ராஜஸ்தான் மாநிலத்தில் கோடைக்காலம் உச்சத்தில் இருப்பதால் கடும் வறட்சியும் குடிநீர்த் தட்டுப்பாடும் காணப்படுகிறது.
இதனால் பல கிராமங்களில் மக்கள் தங்கள் நீர்த் தொட்டிகளுக்கு பூட்டு போடும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக தண்ணீர்த் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக அஜ்மீர் அருகே உள்ள கிராமங்களின் மக்கள் கூறுகின்றனர்.
தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக வீடு புகுந்து தண்ணீரைத் திருடும் சம்பவங்கள்அதிகரித்துள்ளன. இதையடுத்து தண்ணீர் குடங்கள், தொட்டிகளுக்குப் பூட்டுப் போட வேண்டியிருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்