ஒரு வார காலத்திற்கு மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்துவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு நிலைமையை ஆராய்ந்த பின்னர் மேலும் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது ஊரடங்கை கடுமையாக்கலாமா என முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு நீடிக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை 50 சதவிகித பணியாளர்களுடன், மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்கவும், தனியார் வாகனங்கள் ஓடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மிகவும் குறைவாக, பீகாரில் 24 மணி நேரத்தில், 762 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.