புதுச்சேரியில் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
மதுபானங்களுக்கு பெயர்போன புதுச்சேரியில் கடந்த 40 நாட்களாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுக்கிடந்தன. கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு, சானிட்டைசர் குடித்து உடல்நலப் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், மதுபான கடைகளை திறக்க வேண்டுமென எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று பலரும் மது வாங்கிச்சென்றனர். பைகளை எடுத்து வந்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர். ஒருவர் உணர்ச்சி மேலீட்டால், மதுபானங்களை கட்டியணைத்து முத்தமிட்டார்.