மேற்கு வங்கத்தில் கெரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகப்பெரும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்ததாகக் குறிப்பிட்டுள்ள மம்தா, பெற்றோர்கள், மாணவர்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில், 10 மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.