பாகிஸ்தானில் தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் மீது, மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 30 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு சென்று கொண்டிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் வழியில் தர்க்கி என்ற இடத்தில் தடம்புரண்டு, பெட்டிகள் கவிழ்ந்துள்ளன. அப்போது
லாகூரில் இருந்து கராச்சி சென்ற சர் சையத் எக்ஸ்பிரஸ், தடம்புரண்டு கிடந்த மில்லத் எக்ஸ்பிரஸ் மீது மோதியுள்ளது. இரண்டு ரயில்களிலும் 13 முதல் 14 பெட்டிகள் தடம்புரண்டு, 8 பெட்டிகள் வரை முழுமையாக சேதமடைந்தன.
இந்த கோர விபத்தில் ரயிலில் பயணித்தவர்கள் 30 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேறபட்டோர் காயமடைந்துள்ளனர். சிதைந்த ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.