உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுடன் காணொலியில் கலந்துரையாடினார்.
அப்போது, பூமியின் வளங்களை மேம்படுத்த, ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபடுமாறு மோடி வலியுறுத்தினார்.விவசாய பணிகளுக்கு சூரிய மின்சக்தியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
எத்தனால் மற்றும் பயோகேஸ் குறித்த விவசாயிகளின் அனுபவங்களை அவர் கேட்டறிந்தார். 2014 வரை பெட்ரோலில் ஒரு சதவிகிதம் என்ற அளவுக்கே சேர்க்கப்பட்ட எத்தனால் இப்போது 8 புள்ளி 5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மோடி சுட்டிக்காட்டினார், எண்ணெய் நிறுவனங்கள் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு எத்தனால் வாங்கியதாகவும், இந்த தொகை முழுவதும் விவசாயிகளை சென்றடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் எத்தனால் உற்பத்திக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற மோடி,முன்னோடி திட்டமாக, புனேவில் E-100- எதனால் வழங்கு நிலையங்களை துவக்கி வைத்தார்.