எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் வீரமங்கை மலாலா யூசுப்ஜாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது அடிப்படைவாத மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. அண்மையில் பிரிட்டன் பத்திரிகையான வோக் அட்டையில் மலாலா இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது. அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் இதுவரை பேசாத தமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு மலாலா பதிலளித்துள்ளார்.
அதில் திருமணம் குறித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை என்று மலாலா கூறியுள்ளார். மலாலாவின் கருத்து பொறுப்பற்றது என்று பாகிஸ்தானில் கண்டனம் வலுத்துள்ளது.