அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2003ஆம் ஆண்டு கான்கார்டு சூப்பர் சோனிக் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், பூம் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 15 சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்த விமானத்தில் 65 முதல் 88 பேர் பயணிக்க முடியும், பயண நேரமும் பாதியாக குறையும். முதற்கட்டமாக இந்த விமானங்களுக்கு, பிசினஸ் கிளாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.