அரசுக்கு எதிராக கருத்து கூறும் செய்தியாளர்களை கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகம் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான அண்மைக்கால உத்தரவுகளில் முக்கிய உத்தரவை நேற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மதரீதியான கலவரத்தை தூண்டும் விதமாகவோ, வன்முறையைத் தூண்டும் விதமாகவோ எழுதாத செய்தியாளரை வெறும் அரசு எதிர்ப்பு என்பதற்காக கைது செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வினோத் துவா என்ற இமாச்சல மாநில செய்தியாளர் மீதான தேச துரோக வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஒவ்வொரு செய்தியாளருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்