2 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மற்றும் நாக்பூரில் தனியார் மருத்துவமனை மூலம், இந்த இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெறுகிறது.
2 முதல் 18 வயதுக்குட்பட்ட 525 பேர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, 28 நாள் இடைவெளியில் 2 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மூன்றாம் கட்ட பரிசோதனையும் நடத்தப்பட்ட பின்னர், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், சிறார்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படும். அப்படி அனுமதிக்கப்பட்டால், இந்தியாவில் எல்லா வயதுடையவர்களுக்கும் போடப்படும் முதல் தடுப்பூசியாக கோவாக்சின் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.