கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகச் சென்னை மாநகராட்சிக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 88 கோடியே 42 இலட்சம் ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சைப் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓராண்டுக்கான ஊதியம், சுகாதார ஆய்வாளர், ஆய்வகப் பணியாளர், எக்ஸ்ரே பணியாளர், களப்பணியாளர் ஆகியோருக்கான ஆறு மாத ஊதியம் ஆகியவற்றை வழங்குவதற்காக மொத்தம் 88 கோடியே 42 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.