கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது 8 ஆயிரத்து 700 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு ரயில்வேதுறை பதிலளித்துள்ளது. அதில், கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும், புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை வழியைக் கைவிட்டு, ரயில் தண்டவாளங்கள் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதாகத் தெரிவித்துள்ளது.
பொதுமுடக்கம் என்பதால் ரயில்கள் வராது என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்றும், மாறாக சில ரயில்கள் இயக்கப்பட்டதில் அடிபட்டு 8 ஆயிரத்து 733 பேர் இறந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது