மின்சார வாகனங்களைப் பதிவு செய்யவும், பதிவைப் புதுப்பிக்கவும் கட்டண விலக்கு அளிப்பதற்கான வரைவு அறிக்கையை மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலைக் காக்க பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மின்சார வாகனங்களுக்குப் பதிவுக் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பதற்கான வரைவு அறிவிக்கையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இதேபோல் பழைய வாகனங்களைக் கழித்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவோருக்குச் சாலை வரியில் 15 முதல் 25 விழுக்காடு வரை சலுகை வழங்குவதற்கான அறிவிக்கையையும் ஏற்கெனவே வெளியிட்டது.