தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம் மீது விதிக்கப்பட்டட தடையை நீக்கியுள்ள மத்திய அரசு, தற்காலிகமாக இனிமேல் தொழிற்துறைக்கான ஆக்சிஜன் விநியோகத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவின் 2 ஆவது அலை வீசத் துவங்கியதும், மருத்துவ தேவைக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க ஏதுவாக, தொழிற்துறை ஆக்சிஜன் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தை அரசு அமல்படுத்தியது.
இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் தேவைக்கு ஏற்ப, மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்து, சிறு,குறு,நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் ஆக்சிஜனை விநியோகிக்கலாம் என உள்துறை அமைச்சகம் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது