இந்தியாவின் பழைமையான சட்டங்களில் ஒன்றான தேசத்துரோக சட்டம் தவறாகப் பயன்படுதப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், எது தேசத்துரோகம் என்பதை வரையறுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை விமர்சித்ததற்காக அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பியதற்காக 2 தனியார் செய்திச் சேனல்கள் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, சேனல்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எல்லாவற்றையும் தேசத் துரோகம் என்று கூறிவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், எது தேசத்துரோகம் என்பதை வரையறுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறினர். இந்திய தண்டனைச் சட்டத்தில் தேசத்துரோகம் என்பதை வரையறுக்கும் 124ஏ பிரிவானது, கடந்த 1870ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் இணைக்கப்பட்டது.