சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர் ஒருவர் கூட செவி சாய்க்க மாட்டார்கள் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வந்து அதிமுகவை கைப்பற்றுவது போல சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசிய ஆடியோ வெளியானது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவினர் யாரும் சசிகலாவிடம் பேசவில்லை எனவும், மாறாக சசிகலா தான் அதிமுகவினரிடம் பேசி வருவதாகவும் கூறிய கே.பி. முனுசாமி, சசிகலாவிடம் பேசியதாக சொல்லப்படும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள் என்றார்.