மகாராஷ்ட்ராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் இதனை அறிவித்தார்.
சில மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்திருப்பதையடுத்து அங்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்போவதாகவும் கூறிய தாக்கரே, தற்போதைய நிலவரப்படி பத்து சதவீதத்திற்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 40 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளே நிரம்பியிருப்பதாகவும் கூறினார்.
அத்தியாவசிய தேவைகளுக்கான மளிகை,காய்கறி கடைகள் பிற்பகல் இரண்டு மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.