உத்தரகாண்டில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமமே கூண்டோடு தப்பித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பித்தோராகார் பகுதியில், Aultari மற்றும் Jamtari கிராமங்களில் அதிகாரிகள் தொற்று பரிசோதனை மேற்கொண்ட தகவல் அருகே இருந்த Kuta Chaurani கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள பெரும்பாலானோர் பரிசோதனைக்கு பயந்து அருகில் இருந்த வனப்பகுதிக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பரிசோதனை மேற்கொண்டால் தான் தாங்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாவோம் என அந்த பழங்குடியினர் பயப்படுவதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளதால், அந்த சமூகத்தில் ஓரளவு படித்தவர்கள் மூலம் பழங்குடியின மக்களுக்கு பரிசோதனை குறித்து எடுத்துக்கூற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.