இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் ஆகியன தெரிவித்துள்ளன. புதிய கொள்கைகளின் படி கட்டாயம் நியமிக்க வேண்டிய தனி அதிகாரிகளை நியமிப்பதாவும் அவை அறிவித்துள்ளன.
இந்த நிறுவனங்களும், கூ, ஷார்சாட், டெலகிராம், லிங்க்டுஇன் ஆகிய நிறுவனங்களும் இந்த அதிகாரிகளின் பெயர்களை ஐ.டி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன.
ஆனால் டுவிட்டர் இதுவரை இது குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய டிஜிட்டல் கொள்கைகளை மத்திய அரசு வெளியிட்டது.
அவற்றை மே மாதம் 26 ஆம் தேதிக்குள் ஏற்றுக்கொள்வதாக சமூக ஊடகங்கள் அறிவிக்க வேண்டும் என்ற கெடுவும் விதிக்கப்பட்டது. இதனிடையே தனது வழக்கறிஞர் ஒருவரை தனி அதிகாரியாக நியமிப்பதாக வெள்ளிக்கிழமை இரவு டுவிட்டர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.