பிரான்சில் இருந்து ஆறாவது தவணையாக அனுப்பி வைக்கப்பட்ட 3 ரபேல் போர் ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுளளன.
கடந்த மாதம் 22ம் தேதி 5ம் தவணையில் 4 விமானங்கள் 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தியா மொத்தம் 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்துள்ளது. தற்போது மூன்றில் இரண்டு பங்கு ரபேல் விமானங்களை பிரான்ஸ் கொடுத்துள்ளது.
இவை தரையிலும் கடலிலும் தாக்குதல் நடத்தும் திறன் மிக்கவை. அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏற்றிச் செல்லக்கூடியவை.பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது வானில் இருந்தே தாக்கிய இந்திய விமானப்படையினருக்கு இது போன்ற தாக்குதல்களை நிகழ்த்த ரபேல் விமானங்கள் உதவும்