டெல்லியில் மே 31 முதல் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று டெல்லியில் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணிக்கை குறைவதால் படுக்கைகள் ,ஆக்சிஜனுக்கு இருந்த தட்டுப்பாடுகள் குறைந்துள்ளன.
டெல்லி துணை நிலை ஆளுநர், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அறிவிக்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.கடந்த ஏப்ரல் 19ம் தேதி டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.