கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஜூன் 30 வரை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தியதால் தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற பகுதிகளில் புதிய தொற்றுகள், நோயாளிகள் எண்ணிக்கை ஆகியன குறைந்தள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.