பஞ்சாப் நேசனல் வங்கியில் 14ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததில் தொடர்புடைய வைர வணிகர் மெகுல் சோக்சியை நாடு கடத்துவதற்கு டொமினிக்கன் குடியரசு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்று 2018ஆம் ஆண்டு முதல் அங்குக் குடியிருந்து வந்த மெகுல் சோக்சியை விசாரணைக்காக நாடு கடத்த இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அங்கிருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற மெகுல் சோக்சி டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டார்.
அவரது வழக்கறிஞர் சார்பில் டொமினிக்கன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மறு உத்தரவு வரும் வரை மெகுல் சோக்சியை நாடு கடத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அவருக்குச் சட்ட உதவி வழங்கவும், வழக்கறிஞர்கள் அவரிடம் பேசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.