மேற்கு வங்கத்தை யாஸ் புயல் தாக்கும் முன்னர் கடலில் இருந்து மேகங்கள் நீரை உறிஞ்சி எடுத்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
அம்மாநிலத்தின் ஹூக்ளி, பண்டேல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வீடியோ நேற்று காலை எடுக்கப்பட்டது. யாஸ் புயல் கரையைக் கடக்கும் முன்பாக வானில் சூழ்ந்திருந்த கருமேகங்கள் காற்றின் சுழற்சியால் கடல் நீரை விண்ணுக்கு இழுத்துக் கொண்டன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.