அலோபதி மருத்துவம் குறித்து இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக பதஞ்சலி சாமியார் ராம் தேவ், 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என IMA எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஐ.பி.சி 499 ன் படி ராம் தேவின் செயல் குற்ற நடவடிக்கைக்கு உட்பட்டது எனவும், அலோபதி மருத்துவம குறித்த தமது முந்தைய விமர்சனத்தை திருத்தி புதிய வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் ராம்தேவ் வெளியிட வேண்டும் எனவும் IMA வலியுறுத்தி உள்ளது.
அதைப் போன்று தனது கொரோனில் மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என விளம்பரம் செய்வதை நிறுத்துமாறு ராம் தேவுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தமது கருத்தை 2 தினங்களுக்கு முன்பு ராம்தேவ் வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.