60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 42 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதைப் போன்று உலகில் 20 கோடிக்கும் அதிகமான டோசுகள் தடுப்பூசி போடப்பட்ட இரண்டாவது நாடு என்ற இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி டோசுகளை தாண்டிய நிலையில், அந்த இலக்கை இந்தியா 130 நாட்களில் எட்டி விட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.